"கணவர்.. ஆபாசம்" - இரவோடு இரவாக போலீஸ் ஸ்டேஷன் வந்த சீரியல் நடிகை ரச்சிதா
பிரபல சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமி, தனது கணவர் மிரட்டுவதாக கூறி, மாங்காடு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்..
தனியார் தொலைக்காட்சி சீரியல் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து பிரபலமான ரட்சிதா மகாலட்சுமி, தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை, சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாங்காடு காவல் நிலையத்தில் ரட்சிதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவர் தினேஷ் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதோடு, மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார். இப்புகாரின் பேரில், இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
