இக்கட்டான சூழலில் செந்தில் பாலாஜி?.. புழல் To ஸ்டான்லி மருத்துவமனை.. - வெளியான அதிர்ச்சி தகவல்

புழல் சிறைக்கு கொண்டு வரப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், அங்கிருந்து புழல் சிறைக்கு கொண்டு வரப்பட்டார். சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு, சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com