செந்தில் பாலாஜி வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையீடு

x

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு அளித்த நிலையில், மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படியானது எனவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டடுள்ளன. இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு அவர்களின் வழக்கறிஞர்கள் இன்று முறையிடவுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்