செந்தில் பாலாஜி விவகாரம்.. தலைமறைவான தம்பி.. தமிழக போலீஸ் அதிரடி..நடுங்கும் 80 பேர்

x

செந்தில் பாலாஜி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில், செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேர்முகத் தேர்வு நடத்திய அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய நிலையில், அப்போது பணியமர்த்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் என 80க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் அசோக் தலைமறைவாக உள்ளதால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மத்திய குற்றப்பிரிவு போலீசார், வரும் ஜூலை 6-ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு அலுவலகத்தில், உரிய ஆவணத்துடன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்