நடிகர் ரஜினிகாந்த் பட ஷூட்டிங்கில் பரபரப்பு - கார் டாப்-ல் நின்றவாறு சென்ற காட்சி

x

திருவண்ணாமலை அருகே லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்தை காண, ரசிகர்கள் குவிந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திருவண்ணாமலை-வேலூர் சாலையிலுள்ள சத்திரம் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள், அவரை காண குவிந்தனர். தொடர்ந்து ரஜினிகாந்த் வரும் போது, தலைவா என கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரஜினிகாந்தும் காரில் நின்றவாறு கையசைத்து, ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்