கலை நிகழ்ச்சியில்.. "சிலம்பத்தை மாஸாக சுற்றிய செஞ்சி மஸ்தான்"

x

கலை நிகழ்ச்சியில்.. "சிலம்பத்தை மாஸாக சுற்றிய செஞ்சி மஸ்தான்"

தமிழ்நாடு, தமிழகம் என தமிழை விடாமல் பேசுவதற்காக, தமிழக ஆளுநருக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில், அரசு சார்பில் மரபு நடை நிகழ்ச்சியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிலம்பம் சுற்றியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு, தமிழகம் என தமிழை விடாமல் பேசுவதற்கு ஆளுநர் ரவிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்