சத்தியமூர்த்தி பவனில் நடந்த கருத்தரங்கு - காங். மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு?

x

அரசியலமைப்புச் சட்ட நாளை முன்னிட்டு சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த கருத்தரங்க நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்க மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகை, கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, கே.ஜெயக்குமார் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த கருத்தரங்கில் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். கடந்த 15ம் தேதி சத்தியமூர்த்தி பவன் கலவரத்திற்கு பிறகு கே.எஸ்.அழகிரி தனியாகவும், ஈவிகேஎஸ்.இளங்கோவன் தனியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்