46வது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வராகவன்...

46வது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வராகவன்...
Published on

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இன்று தனது 46வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் இயக்குநராகத் திரைத் துறையில் தனது பயணத்தைத் துவங்கிய செல்வராகவன், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என். ஜி. கே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்... சாணிக்காயிதம், பீஸ்ட், பகாசூரன் திரைப்படங்களில் நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார்... தான் இயக்கும் திரைப்படங்களுக்கென தனி பாணியைக் கடைப்பிடித்து, எப்போதும் பெண் கதாபாத்திரங்களை மிகவும் அழுத்தமாக பதிவு செய்யும் செல்வராகவனுக்கு திரையுலகினரும் ,ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com