கேரளா லாட்டரி என சொல்லி போலி டோக்கன் விற்பனை - சிவகங்கையில் பெண் கைது

x

சிவகங்கையில் போலி லாட்டரி டோக்கன் விற்பனை செய்த ஒரு பெண் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே சிலர் போலி லாட்டரி டோக்கன்களை விற்று மோசடி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், அப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட நால்வரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரளா லட்டரி எனக் கூறி கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவர, அவர்களிடம் இருந்து 40 ஆயிரம் மதிப்புள்ள போலி லாட்டரி டோக்கன்களை பறிமுதல் செய்த போலீசார் நால்வரையும் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்