ரகசியம் அம்பலம்.. கேமராவில் லீக்ஸ் - தப்பிய தமன்னா.. சிக்கிய தேவரகொண்டா ஜோடி

ரகசியம் அம்பலம்.. கேமராவில் லீக்ஸ் - தப்பிய தமன்னா.. சிக்கிய தேவரகொண்டா ஜோடி
Published on

படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் லவ் பேர்ட்ஸாக வலம் வருவது இந்தி திரையுலக நடிகர், நடிகைகள் மத்தியில் வாடிக்கையான விஷயமாக மாறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

பட அப்டேட்டுகளை விட கிசுகிசுக்கள் அப்டேட்டிற்கு பாலிவுட்டில் பஞ்சம் இருக்காது. திரையில் ஜோடியான பலரும் நிஜத்திலும், டேட்டிங் அவுட்டிங் என அவ்வப்போது கண்ணில் படுவது உண்டு.

இதில் சில ஸ்டார் ஜோடிகளின் காதல் திருமணத்திலும் முடிந்துள்ளது. கஜோல் அஜய் தேவ்கன் தொடங்கி ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் ஜோடிகளின் டேட்டிங் வாழ்க்கை ரகசியம் காக்கப்பட்டது. பொதுவெளியில் காதல் வாழ்க்கை குறித்து வாய்த்திறக்காமல் மௌனம் காத்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

சமூக வலைத்தள காலத்திற்கு பிறகு காதல் வாழ்க்கை ரகசியம் காப்பதில் நட்சத்திரங்களுக்கு சவாலாகவே இருந்தது. இருப்பினும் தங்கள் காதல் வாழ்க்கையில் நடிகர்கள் இருக்க, அவர்களை பற்றிய கிசுகிசுக்கள் மட்டும் வெளி வந்து கொண்டே இருக்கும்.

அப்படி கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகளான தீபிகா படுகோன் ரன்வீர் சிங் தற்போது சென்சேஷனல் தம்பதியாக வலம் வருகின்றனர். விமர்சனங்களுக்கு பெயர் போன ரன்பீர் ஆலியா பட் ஜோடியும் பெண் குழந்தையுடன் நிம்மதியாக உள்ளனர்.

இவர்களை எல்லாம் தாண்டி கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ராவின் காதல் திருமணம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்தது தமன்னா மற்றும் விஜய் வர்மா.

லஸ்ட் ஸ்டோரிஸில் காதல் வயப்பட்டு காதலர்களாக வலம் வரும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.

இந்த காதல் ஜோடிகளின் கிசுகிசுக்கள் முடிவுக்கு வருவதற்கு, பாலிவுட்டில் வளர்ந்து வரும் அனன்யா பாண்டே, ஆஷிக் பட நடிகரான ஆதித்யா ராய் கபூருடன் சுற்றித்திரியும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இருவரும் ஐரோப்பாவில் காதல் ஜோடியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

24 வயதான அனன்யா 37 வயதான ஆதித்யாவை காதலிப்பதாக செய்தி வெளியான நிலையில் இவர்களின் வயதை காரணம் காட்டி ட்ரோல் செய்து வந்தனர் இணையவாசிகள்...

இதற்கு முன் விஜய் தேவரகொண்டாவுடன் லைகர் படத்தில் நடித்த போதும், அனன்யாவை விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பேசப்பட்டதும் தனிக்கதை.

இந்த ஜோடி திருமணம் வரை செல்லுமா அல்லது அடுத்தப்படத்தில் இணைந்து நடிப்பதற்கான முன்னறிவுப்புடனான ப்ரமோஷன் என தெரிவிக்க, அனன்யா திரைத்துறையில் நீங்கா இடம் பிடித்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com