மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்.. டெக்சாஸ் சூப்பர் கிங்சை வென்ற சியாட்டில்..
சியாட்டில் ஆர்காஸ் அணியிடம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. மோரிஸ் வில்லேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய டெக்சாஸ் அணி 127 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சியாட்டில் அணி கேப்டன் பார்னெல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய சியாட்டில் அணி, 16வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சியாட்டில் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
Next Story
