சீமானுக்கு சிக்கல்? - தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி

x

அருந்ததியினரை அவதூறாக பேசிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.சென்னை அரசினர் விருந்தினர் மாளிகையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹெல்டர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பதிவான 16 வழக்குகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை எஸ்பிக்கள் உடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், அருந்ததியினர் மக்கள் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆணையத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டவர்களின் பற்களை பிடுங்கப்பட்ட விவகாரத்தில், இருவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்ததாகவும், ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை என்றும் அருண் ஹெல்டர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்