கடல் அரிப்பு...நீரில் மூழ்கிய சாலை

கடல் அரிப்பு...நீரில் மூழ்கிய சாலை
Published on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொழியூரில், கடல் அரிப்பு ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக, பொழியூரில் கடல் அரிப்பு ஏற்பட்டதில், ஆறு வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில், 47 குடும்பங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், கொல்லம்கோட்டில் இருந்து நீரோடி வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் சாலை முழுவதும் நீரில் மூழ்கியது. தொடர்ந்து, கடல் சீற்றம் காணப்படுவதால், கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com