போலீஸ் காலில் விழுந்து கதறிய பெண் - பரபரப்பு காட்சிகள்

x

விருத்தாச்சலத்தில், காதல் கணவனை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி காவல் ஆய்வாளர் காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

விருத்தாச்சலம் அருகே கஸ்பா காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகன் மற்றும் கல்பனா. இவர்கள் 7 ஆண்டுகளாக காதலித்ததாகக் கூறப்படும் நிலையில், இவர்கள் திருமணத்திற்கு ஜெகன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், கல்பனா கடந்த 3 மாதங்கள் முன்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில், போலீசார் இரு வீட்டாரையும் பேசி சமாதானம் செய்தனர்.

இதையடுத்து, பெண் வீட்டார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

ஆனால், திருமணத்திற்கு அடுத்த நாளே ஜெகன் தலைமறைவாகியுள்ளார்.

தனது காதல் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி கல்பனா போலீசில் புகாரளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்