"25 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க வேண்டும்" - பிரபல கிரிக்கெட் வீரர் மீது சேவாக் கடும் காட்டம்

x
  • ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் மந்தமாக ஆடுவதை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
  • ராஜஸ்தானுடனான லீக் போட்டியில் 55 பந்துகளை சந்தித்த வார்னர் 65 ரன்கள் எடுத்தார்.
  • இந்நிலையில், வார்னரின் மந்தமான இன்னிங்சை விமர்சித்துப் பேசியுள்ள சேவாக், இளம் வீரர் ஜெய்ஸ்வாலைப் போல், 25 பந்துகளுக்கு 50 ரன்களை அடிக்க வார்னர் முயற்சிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வார்னர் விளையாடவே வர வேண்டாம் என்றும் காட்டமாகப் பேசி உள்ளார்.
  • இதேபோல், வார்னரை விமர்சித்துள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், டெல்லியின் தோல்விக்கு வார்னர்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்