இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு... மாணவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

x
  • சென்னையில் பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்வு கட்டுப்பாட்டு அறை இன்று திறக்கப்பட உள்ளது.
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும், நாளை 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் துவங்க உள்ளது
  • . இதில், தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்வு கட்டுப்பாட்டு அறையை திறக்க உள்ளதாக தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்திருந்தார்.
  • இந்நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட கூடிய தேர்வு கட்டுபாட்டு அறை இன்று திறக்கப்பட உள்ளது.
  • இதில், மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வுகள் குறித்த புகார்களையும், கருத்துகளையும் தெரிவிக்க இரண்டு செல்பேசி எண்களையும் தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்