நீண்ட விடுமுறைக்கு பின் திறக்கப்பட்ட பள்ளிகள்.. துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்

x

கோவை மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் 2043 அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன இதில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். கோடை விடுமுறைக்கு பின்பாக இன்று பள்ளி தொடங்கியுள்ளது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளியில் சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட உள்ளன மேலும் பள்ளி தொடங்கியதால் மாணவர்களை புத்துணர்வு ஊட்டும் விதமாக ஒருவாரத்திற்கு புத்தாக்க பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது பள்ளியை சுத்தமாக வைத்திருப்பது உடற்பயிற்சி உள்ளிட்ட புத்தக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது தமிழக பாடநூல் கழக சார்பாக அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன அதனையும் அனைத்து மாணவர்களுக்கும் கொடுக்கும் வண்ணம் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்