கும்பலாக மோதிக்கொண்ட மாணவர்கள்...ஆத்திரத்தில் தாக்கிய பொது மக்கள்...அதிர்ச்சி வீடியோ காட்சி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே மாணவர்களை சிலர் சராமரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடம்பநாடு பகுதியில் பள்ளி மாணவர்கள் இருதரப்பினராக பிரிந்து மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் எச்சரித்தும் மாணவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதால், அங்கிருந்த சிலர் ஆத்திரத்தில் மூன்று மாணவர்களை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com