பள்ளி விடுமுறை முடிந்த‌த‌ன் எதிரொலி :சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்த மக்கள் கூட்டம்

பள்ளி விடுமுறை முடிந்த‌த‌ன் எதிரொலி :சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்த மக்கள் கூட்டம்
x

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்த ஒரு மாதம் கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த‌து. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகை தந்தவர்கள், மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல கூட்டம் கூட்டமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். ஏராளமானோர் கூடியதால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால், பேருந்து நிலையம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. பேருந்துகள் கிடைக்காமல் பலர் காத்திருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

https://youtu.be/9mdezai97h4


Next Story

மேலும் செய்திகள்