ஸ்பெஷல் கிளாஸில் மாணவியிடம் அத்துமீறிய பள்ளி தாளாளர் - வெறி கொண்டு தேடும் போலீஸ்

x

புதுச்சேரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி தொண்டமாநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் தாளாளர் குமரன். இவர் அதேபள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவியிடம், சிறப்பு வகுப்பின் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குமரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகவுள்ள குமரனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்