திடீரென சிக்கிய பள்ளி பேருந்து.... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்

x

ரிஷிவந்தியம் அருகே பள்ளி பேருந்து பள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே, அரசு கேபிள் புதைப்பதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று, பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை, பத்திரமாக வெளியேற்றினர். பள்ளங்களை மூடி சாலையை அகலப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்