தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம்..தந்தி டி.வியில் வெளியான செய்தி - எம்.எல்.ஏ எடுத்த அதிரடி

x
  • தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம்..தந்தி டி.வியில் வெளியான செய்தி - எம்.எல்.ஏ எடுத்த அதிரடி ஆக்‌ஷன்
  • மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் எம்.எல்.ஏ முயற்சியால் 29 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
  • ஆனால் ஒப்பந்ததாரர் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு கட்டடம் கட்டி வருவதாகவும் லேசான மழைக்கே செங்கற்கள் கரைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
  • இது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியானது . இந்நிலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதையடுத்து தரமற்ற அக்கட்டடம் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.
  • தரமான முறையில் கட்டிடம் கட்டி தரப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது .
  • தந்தி டிவிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்