லாரன்ஸ் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற மாணவன் மாயம்? - தாய் அளித்த பரபரப்பு புகார்

x

லாரன்ஸ் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற மாணவன் மாயம்? - தாய் அளித்த பரபரப்பு புகார்


சென்னையில் நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதாக கூறி சென்று மாயமான மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவருடைய மகன் மகன் ஹாரில் கண்ணா. இவர் பள்ளி முடிந்து நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்த நாள் விழாவிற்கு செல்வதாக கூறி சென்றதாகவும், தற்போது வரை வீடு திரும்பவில்லை எனவும் கூறி இவரின் தாய் போலீசில் புகாரளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் மாயமான மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்