டியூஷன் செல்லாததை கண்டித்த தந்தை... 9 ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு

x

டியூஷன் செல்லாததை கண்டித்த தந்தை... 9 ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு

புதுச்சேரி, முத்தியால்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த தசரதன் என்பவரின் மகன் பாலமுருகன், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பாலமுருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளான். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், கடந்த 2 நாட்களாக சிறுவன் டியூஷனுக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை தந்தை கண்டித்ததால், மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்