முகநூலில் விளம்பரம் செய்து ரூ.91 லட்சம் மோசடி - விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி

x

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, முகநூலில் விளம்பரம் செய்து, 91 லட்ச ரூபாய் மோசடி செய்தவரை ஆவடியில் போலீசார் கைது செய்தனர்.

ஆவடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் வெளியிட்ட விளம்பரத்தை பார்த்து, கடலூரைச் சேர்ந்த சைலேஷ் என்பவர் அணுகியுள்ளார். அந்த நிறுவனத்தில் இருந்த சையத் மின் ஹாஜீதீன் உள்ளிட்ட சிலரிடம், 3 லட்ச ரூபாயை சைலேஷ் கொடுத்துள்ளார். ஆனால், வெளிநாட்டுக்கும் அனுப்பாமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியதால், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவு போலீசில் சைலேஷ் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சையத் மின் ஹாஜீதீனை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து அந்த நிறுவனத்தை நடத்தி, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் 91 லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. கைதான சையத் மின் ஹாஜீதீன், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்