"மூக்கணாங்கயிறே இல்லாத இலாக்கா"... "கனிமவளத்துறையை காப்பாற்றுவது பெரிய சவால்" - அமைச்சர் துரைமுருகன்

x

சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரையை வழங்கி பேசிய அமைச்சர் துரைமுருகன், கனிமம் மற்றும் சுரங்கத்துறை மூக்கணாங்கயிறு இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தெரிவித்தார். மேலும் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கனிமவளத்துறையில் ஆயிரத்து 712 கோடி லாபம் ஈட்டியதாகவும், நடப்பாண்டில் ஆயிரத்து 572 கோடி லாபம் கிடைத்ததாகவும் அவர் கூறினார். நஷ்டத்தில் இயங்கி வந்த சுரங்கத்துறையை பள்ளத்திலிருந்து சாலைக்கு தூக்கி நிறுத்தி கடந்தாண்டில் 19 கோடி ரூபாய் லாபத்தை பெற்றதாகவும், இத்துறையை அடுத்த ஐந்தாண்டுகளில் கோபுரமாக மாற்றி கூடுதல் வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தபோதிலும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையை கட்டி காப்பாற்றுவது பெரிய சவாலாக இருப்பதாகவும் துரைமுருகன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்