"மண் வளம் காக்க" - டெல்லி டூ தமிழ்நாடு - 20 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செல்லும் 2 இளைஞர்கள்

x

டெல்லியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் ஜெய்சுலாங்கி ஆகிய இளைஞர்கள், நமது நாட்டின் மண் வளத்தை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி தங்கள் நடைபயணத்தை தொடங்கினர். உத்திரபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழகத்தை வந்தடைந்த இவர்கள், 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணமாக செப்டம்பர் 3-ஆம் தேதி கோவையை வந்தடைந்தனர். அங்கு, சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்த அவர்கள் இருவரும், தங்கள் பயணத்தை சைக்கிள் பயணமாக மாற்றினர். பின்னர், பல்வேறு மாவட்டங்களை கடந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை வந்தடைந்தனர். ஓசூரை சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடக்கவுள்ளதாக தெரிவித்த இளைஞர்கள், தங்கள் கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட மனுக்களை பிரதமர் மோடியிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்