மிதக்கும் பாறைகள்.. பறக்கும் ட்ராகன்கள்.. 1 லட்சம் வீடுகள்.. 9 ஆயிரம் ஓட்டல்கள்.. சவுதி உருவாக்கும் உலக அதிசயம்..! உலகத்துக்குள்ளே இன்னொரு உலகம்

x
  • திரைப்பட ட்ரைலர் போல் வெளியாகியிருக்கும் இந்த பிரமாண்டம்தான் இப்போது உலகம் முழுவதும் பேச்சாக இருக்கிறது...
  • ஆம், இந்த வீடியோவில் பார்க்கும் காட்சியை விரைவில் நீங்கள் உண்மையாக பார்க்கலாம் என்கிறது சவுதி அரேபியா...
  • எண்ணெய் வளமிக்க நாடு சுற்றுலா, வர்த்தகத்தை வளர்த்தெடுக்கவும், உலகின் வர்த்தக மையமாகவும் ஆர்வம் காட்டுகிறது. அந்த வகையில் இப்போது பிரமாண்ட கட்டிடம் ஒன்றை எழுப்பவிருக்கிறது.
  • 'தி முகாப்' என பெயரிடப்பட்டிருக்கும் அந்த கட்டிடத்திற்கு அத்தனை வசதியையும் கொண்டுவரவிருக்கிறது. ரியாத் மத்தியில் 400 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட கட்டிடம் அமைக்கப்படுகிறது.
  • நியூயார்க்கில் இருக்கும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல் 20 மடங்கு பெரிதாக இருக்கும் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
  • 19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்படும் இந்த கட்டிடத்தில் ஹாலோகிராபி தொழில்நுட்பம் காண்போரை திக்குமுக்காடச் செய்யப்போகிறது... ஆம் மிதக்கும் பாறைகள்... பறக்கும் ட்ராகன்கள்...
  • கொட்டுகிற நீர்வீழ்ச்சி, நிலத்தில் பெருங்கடல் என வியக்கவைக்க இருக்கிறது.
  • ஒரு லட்சம் வீடுகள், 9 ஆயிரம் ஓட்டல் அறைகள், சில்லறை வணிக கடைகள், அலுவலகங்கள், ஓய்வு மையம், அருங்காட்சியகம், பல்நோக்கு திரையரங்கம் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், கலாச்சார மையங்கள் என பல வசதிகள் இடம்பெற விருக்கிறது.
  • சவுதி செல்வோர் விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயணத்தில் 'தி முகாப்' செல்லலாம்...
  • 'தி முகாப்' திட்ட கட்டுமானப் பணி 2030-ல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சவுதி அரேபிய அரசு 9 மில்லியன் மக்களுக்கு வீடு வழங்கும் வகையிலான ஸ்கை ஸ்கிராப்பர் திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இப்போது கட்டவிருக்கும் 'தி முகாப்' கட்டுமானமும் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்