அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா.. கொண்டாட விடுமுறை அளித்த அரசு

x

அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா.. கொண்டாட விடுமுறை அளித்த அரசு


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினாவை, சவுதி அரேபியா வீழ்த்தியதையடுத்து, சவுதியில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், நேற்று சி பிரிவு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியும், சவுதி அரேபியா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில், இரண்டிற்கு ஒன்று (2-1) என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது. இதைக் கொண்டாடும் விதமாக, இன்று சவுதி அரேபியாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்