குப்பென்று வீசிய துர்நாற்றம்... ஓடையோரம் உயிரிழந்து கிடந்த யானை - வனத்துறை தீவிர விசாரணை

x
  • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்துள்ளது.
  • கெத்தேசால் வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர், துர்நாற்றம் வீசியதால் தேடி பார்த்துள்ளனர்.
  • அப்போது, அங்கிருந்த ஓடையோரம் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது.
  • இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர் தலைமையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
  • பரிசோதனைக்கு பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்