சத்யா ஸ்டூடியோ நிலத்தை மீட்கும் விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனம், 2004ஆம் ஆண்டு வரை, 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்த‌தாதால், நிலத்தை திருப்பி எடுக்க 2008ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • இதை எதிர்த்து, சத்யா ஸ்டுடியோ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
  • அதில், 23 ஆயிரத்து 939 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 2001 முதல் 2004 வரை ஒரு கோடியே 90 லட்சத்து 97 ஆயிரத்து 491 ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும், தன்னிச்சையான இந்த உயர்வைத்தான் எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து பதிலளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
  • அதுவரை, நிலத்தை மீட்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்