சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு - பிணை மனு தள்ளுபடி!

• சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், பிணை கோரி தலைமை காவலர் தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. • சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்த வழக்கு, மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. • இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தலைமை காவலர் முருகன், பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். • மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், பிணை வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com