சசிகலா புஷ்பாவின் வீட்டிற்கு சீல்.. பொருட்களை ரோட்டில் வைத்த அதிகாரிகள்

x

சசிகலா புஷ்பாவின் வீட்டிற்கு சீல்.. பொருட்களை ரோட்டில் வைத்த அதிகாரிகள்


முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்து வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர்.

அ.தி.மு.க-வில் மேயராக இருந்து பின், அ.தி.மு.க சார்பில் எம்.பி-யாக ராஜ்ய சபாவுக்குள் நுழைந்தார். அப்போது, மத்திய அரசு சார்பில் டெல்லியில் அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டிலிருந்து அவர் வெளியேறவில்லை எனக் கூறப்படுகிறது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்த நாடாளுமன்ற வீட்டு வசதி குழு அதிகாரிகள், சீல் வைத்து, நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் சசிகலா புஷ்பா மீது தொடர் புகார் அளித்ததாகவும், வீட்டு வாடகை பாக்கி வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்