'பொன்னியின் செல்வன்' - நடிகர் சரத்குமார் ட்வீட்

'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கிய இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நடிகர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திற்கு திரையரங்கம் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பும், கொண்டாட்டமும், சோழ சாம்ராஜ்யத்தின் புகழை மேலும் கண்டங்கள் தாண்டி பரப்புவதற்கான உந்துதலை தரும் என குறிப்பிட்டுள்ள அவர், சோழ சாம்ராஜ்யத்தின் தன அதிகாரி பெரிய பழுவேட்டரையர் என தனது கதாபாத்திரத்தை குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com