ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் தலைமறைவானதால் நண்பரை பிடித்து அடித்த கொடூரம்- சங்கரன்கோவில் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்

x
  • சங்கரன்கோவில் அருகே, அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் 70 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, தலைமறைவான நபரின் நண்பரை தாக்கிய விவகாரத்தில், காவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
  • மேலநீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் என்பவர், அதிகம் வட்டி தருவதாகக் கூறி, அப்பகுதி மக்களிடம் 70 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
  • மேலும், சென்னையில் உள்ள பட்டாலியன் காவல்துறையில் பணியாற்றி வரும் செந்தூர்பாண்டியன் என்பவரும் 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது.
  • இதனால் ஆத்திரமடைந்த செந்தூர் பாண்டியன், அவரது உறவினர் வெள்ளத்துரை ஆகியோர் விஜயராஜின் நண்பரான மாரிமுத்துவை தாக்கியதாக கூறப்படுகிறது.
  • இதில் படுகாயமடைந்த அவர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
  • . இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார், செந்தூர் பாண்டியன், வெள்ளத்துரை ஆகிய இருவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்