தூய்மைப் பணியாளர் மகளின்...டாக்டர் கனவு பலித்தது!...விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

x

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே, தூய்மைப் பணியாளரின் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு பெற்றுள்ளார்.

வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - இந்திராணி தம்பதியின் மகள் பட்டீஸ்வரி.

சிறு வயதிலிருந்தே காது கேட்பதில் சற்று குறைபாடு இருக்கும் பட்டீஸ்வரிக்கு, மருத்துவராக வேண்டுமென்ற ஆர்வம் இருந்துள்ளது.

மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து, நீட் தேர்வு எழுதிய நிலையில், தேர்ச்சி அடையவில்லை.

தொடர்ந்து, வீட்டில் இருந்தபடியே கால் நடைகளை பராமரித்துக் கொண்டு, தானாக படித்து இரண்டாவது முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு கிடைத்த நிலையில், தூய்மை பணியாளராக நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் கூலி பெறும் தங்களால், மகளை சென்னைக்கு அனுப்பி படிக்க வைக்க முடியாது எனவும், அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையறிந்த மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்