4 குழந்தைகளை காவு வாங்கிய புதைகுழி "இது தொடர்ந்தால் இனியும் மரணம் நேரலாம்" - எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

x
  • கரூரில் மாயனூர் கதவணை அருகிலேயே காவரி ஆற்றில் மணல் அள்ளப்படுவது, அணையை வலுவிழக்கச் செய்யும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
  • கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் உள்ள கதவணையை புணரமைக்கும் பணி 185 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
  • இந்த பணிக்காக, அணையில் இருந்து நூறு மீட்டர் தொலைவுக்குள் பொக்லைன் எந்திரங்கள் மூலம், மணல் அள்ளப்படுகிறது. தினமும் சுமார் 1000 யூனிட் அளவுக்கு மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
  • அணைகள், பாலங்கள் உள்ளிட்டவை உள்ள இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மட்டுமே மணல் அள்ளப்பட வேண்டும் என்பது விதியாக உள்ள நிலையில், அணைக்கு அருகிலேயே மணல் அள்ளப்படுவதால், அணையை வலுவிழக்கச் செய்யும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
  • ஏற்கனவே 4 பள்ளி குழந்தைகள் குழியில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், கதவணை அருகே குழிகள் ஏற்படுவது ஆபத்தானது என்றும் கூறியுள்ளனர்
  • . ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மணல் எடுப்பதோடு, ஒப்பந்த‌தார‌ரிடம் மணலுக்கான கட்டணத்தை வசூலித்து வருவாயை பெருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்