நோயால் சிரமப்பட்டு வரும் சமந்தா.. சினிமாவில் இருந்து பிரேக்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்

நோயால் சிரமப்பட்டு வரும் சமந்தா.. சினிமாவில் இருந்து பிரேக்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்
Published on

விஜய் தேவராகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, திரைத்துறையில் இருந்து பிரேக் எடுப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் சோகக்கடலில் மூழ்கியுள்ளனர்.

திரிஷாவா, நயன் தாராவா என்ற போட்டியை தாண்டி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சமந்தா. கதாநாயகிகள் வரிசையில் கொடிக்கட்டி பறந்த சமந்தா, சில காலங்களாகவே அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்திகளாகவே தெரிவித்து வருகிறார்.

நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஹும் சொல்றியா மாமா பாடலுக்கு ஆடி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பாடல் ஹிட் அடித்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மையோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த சோக செய்தியை கேட்டு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்க..சாகுந்தலம், குஷி என நடிப்பில் பிசியானார் சமந்தா. அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிட்டு மையோசிடிஸ் நோயால் தான் பட்ட அவதியை உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

விஜய் தேவராகொண்டாவுடன் குஷி படத்தில் ஜோடியான சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் தொடரிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் தான் மையோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற சமந்தா அமெரிக்கா மற்றும் தென் கொரியா செல்வதாகவும், இதற்காக நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ஒரு வருடம் வரை பிரேக் எடுக்கிறார் என கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் தயாரிப்பாளர்களிடம் திருப்பி கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடல் வலி, வீக்கம், உடற்சோர்வு, மனச்சோர்வு, என நாளும் ஒவ்வொரு வலிக்கும் வேதனைக்கும் ஆளாவதாகவும் சமந்தா வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

மையோசிடிஸ் நோயால் அவதிப்படும் சமந்த, உடல்தேறி மீண்டும் சார்மிங் சமந்தாவாக வரவேண்டும் என்றே ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com