சல்மான் கான் கண் முன்னே ரசிகர்கள் மீது போலீஸ் லத்தி சார்ஜ்

x

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் அவரது ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து சல்மான் கான், வீட்டின் பால்கனியிலிருந்து கையசைத்து ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்