இந்தி திரைபட உலகின் முன்னணி நட்சத்திரமான சல்மான் கான் பிறந்த தினம் இன்று.

x

1965ல் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்த சல்மான் கான், குவாலியாரிலும், மும்பையிலும் பள்ளி கல்வி பயின்றார். அவரின் தந்தை சலீம் கான், இந்தி திரைபடத் துறையில் ஏராளமான படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றி பெரும் புகழ் பெற்றவர்.

மும்பை சேவியர் கல்லூரியில் சேர்ந்த சல்மான் கான், பட்டம் பெறும் முன்பே திரைபடத் துறையில் நுழைந்தார். 1988ல் பிவி ஹொ தோ ஐசி படத்தின் மூலம் இந்தித் திரைப்பட உலகில் துணை நடிகராக அறிமுகமானார். 1989ல், மெகா ஹிட் படமான மெய்னே பியார் கியா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திரமானார்.


Next Story

மேலும் செய்திகள்