செஸ் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள்... திடீரென வந்து அரிவாளால் தாக்கிய கும்பல் - பின்னணியில் அதிர்ச்சி தகவல்
- சேலத்தில், செஸ் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை அரிவாளால் தாக்கி, பணம் பறித்த சம்பவத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தாதகாப்பட்டி பகுதியில், நண்பர்கள் 3 பேர் செஸ் விளையாடியுள்ளனர்.
- அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், கத்தி மற்றும் இரும்பு ராடால் அவர்களை சரமாரியாக தாக்கி, 5 ஆயிரத்து 400 ரூபாயை பறித்துச் சென்றது.
- இந்த தாக்குதலில் காயமடைந்த அருண்குமார், தேவராஜ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், புகாரின் அடிப்படையில், பூபதி, விஜய், ஆனந்தராஜ், சாரதி, போஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
