"சேலம் பல்கலை. கல்லூரிகளில் பி.டெக் நடத்தப்படாது" - அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

x

கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தை தொடங்கும்போது, மாநில அரசுடன் ஏ.ஐ.சி.டி.இ கலந்து ஆலோசிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவு தொடங்கப்பட்டு இருப்பதாகவும், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தகவல் வருவதாகவும் கூறினார்.

அரசின் கவனத்திற்கு இது வந்துள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாநில அரசின் அனுமதி இல்லாமல் இதுபோன்ற படிப்புகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறினார்.

சேலம் பல்கலைக்கழக கல்லூரிகளில் பி.டெக் படிப்பு நடத்தப்படாது என்றும், அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தால் நிறுத்தப்படும் என்றும் அவர் பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்