பெண் டிஎஸ்பி குறித்து Whatsapp-ல் டேட்டஸ் வைத்து சர்ச்சையில் சிக்கிய சேலம் எஸ்பி

x

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தனது வாட்ஸ் அப் பக்கத்தில், ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் பதவியைப் பிடிக்க வசூல்வேட்டை என்ற தலைப்புடன், சேலத்தில் காவல் துறை துணை ஆணையராக இருக்கும் லாவண்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியைப் பெற 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஓய்வுபெற்ற டிஜிபி-யிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியை பெற முயற்சி செய்தார் என்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இதுகுறித்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமாரிடம் கேட்டதற்கு தவறுதலாக அழிக்கும் பட்டனை அழுத்துவதற்கு, பதிலாக ஸ்டேட்டஸ் பட்டனை அழுத்தி விட்டதாகவும், அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கூறினார். ஆனால்,இதுகுறித்து உயர் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளதாக துணை ஆணையாளர் லாவண்யா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்