17 வயது சிறுமிக்கு காதல் வலை... கர்ப்பமாக்கிவிட்டு தலை தெறிக்க தப்பியோடிய காவலர் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x
  • தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
  • பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில், பிரபாகரன் 2 ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது சொந்த ஊரான சிறுவாச்சூருக்கு பிரபாகரன் சென்றபோது, அங்கு 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.
  • சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ வழக்கில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
  • பின்னர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட பிரபாகரன், போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றார்.
  • இதுதொடர்பாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரபாகரன், இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபரின் உதவியுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது.
  • தப்பியோடிய பிரபாகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்