'போதை' சிறுவன் மீது போலீஸ் பாய்ச்சல்.. கண்மூடித்தன தாக்குதல் - கெஞ்சியும் விடாத போலீஸ்..!

சேலத்தில் மதுபோதையில் இருந்த சிறுவனை போலீசார் தாக்கி இழுத்துச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
போதை சிறுவன் மீது போலீஸ் பாய்ச்சல்.. கண்மூடித்தன தாக்குதல் - கெஞ்சியும் விடாத போலீஸ்..!
x

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் மாரியம்மன் கோயில் எருதாட்ட விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இதில் சம்பந்தப்பட்ட சிறுவனும் ஒருவர்.





எருதாட்ட விழாவுக்கு வந்த இவர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. சிறுவன் மது போதையில் இருந்ததைக் கண்ட 10 போலீசார், கொலை குற்றவாளியைப் பிடிப்பது போல் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் தெரு வழியாக சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்து வந்துள்ளனர். சிறுவன் போதையில் உளற உளற அடியும் கொடுத்துள்ளனர். அப்போது ஒரு போலீசார் சிறுவனின் வயிற்றில் பலமாக தாக்கியுள்ளார்.





வலியில் துடித்த சிறுவன், வயிற்றில் மட்டும் அடிக்க வேண்டாம் என கெஞ்சியுள்ளார். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் சிறுவனை தரதரவென இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இருப்பினும் அடங்காத அந்த சிறுவன், "எவ்வளவு வேண்டுமானாலும் அடிச்சிக்கோங்க சார்.. ரிமாண்ட்டில் தான போடூவீங்க. அப்போ பேசிக்கிறேன்" என திமிராக பேசியுள்ளார். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.



Next Story

மேலும் செய்திகள்