சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பி ஓடிய ஆயுதப்படை காவலர்... சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு

x
  • போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர், தப்பியோடிய நிலையில் அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
  • சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பெரம்பலூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.
  • இவர் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முயன்ற போது அங்கிருந்து தப்பியோடினார்.
  • இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இந்நிலையில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், தப்பியோடிய அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்