படிக்கவிடாமல் பாலியல் தொந்தரவு... வளர்ப்பு தந்தை உள்ளிட்ட 2 பேர் மீது புகார்

x
  • சேலத்தில், பொதுதேர்வுக்கு படிக்கவிடாமல் பாலியல் தொந்தரவு தரும் வளர்ப்பு தந்தை உள்ளிட்ட இருவர் மீது, ப்ளஸ் டூ மாணவி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
  • சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்த சிறுமி, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார்.
  • அதில், சிறுமி ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தபோது, சிறுவயதிலேயே சண்முகம் என்பவர் தத்து எடுத்துள்ளார்.
  • இந்த நிலையில், கடந்த 2 ஆண்டு காலமாக, வளர்ப்பு தந்தையான சண்முகம் மற்றும் வீட்டில் குடியிருக்கும் மணி என்பவரும், தினந்தோறும் மது அருந்திவிட்டு பாலியல் தொந்தரவு செய்து வருவதாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி புகாரில் தெரிவித்துள்ளார்.
  • தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் வேளையில், சரிவர உணவு வழங்காமல் கொடுமைப்படுத்துவதாகவும், அதனால் சரிவர படிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்த சிறுமி, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்