அரசு பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... விடைத்தாள் தைக்கும் பணியில் மாணவிகள்... - இணையத்தில் பரவிய வைரல் வீடியோ!

x
  • சேலம் அரசு பள்ளியில் விடைத்தாள் முகப்பு பகுதி தைக்கும் பணியில் மாணவிகள் ஈடுபடுத்தப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் சிறப்பு தையல் ஆசிரியர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • சேலம் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ம் வகுப்பு மாணவிகளைக் கொண்டு விடைத்தாள் முகப்பு பகுதியில் தைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
  • இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து தந்திடிவியில் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.
  • இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த தேர்வுத்துறை இயக்குனர் சேது ராமவர்மா பரிந்துரை செய்திருந்தார்.
  • இதன் அடிப்படையில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வீடியோ தொடர்பாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விசாரணை நடத்தினார்.
  • விசாரணைக்கு பிறகு, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் சிறப்பு தையல் ஆசிரியர் செல்வி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்