பல்ஸ் குறைந்ததா? உயிருடனே இல்லையா?.. 3 மாத பிஞ்சை பறிகொடுத்து கதறிய தந்தை - தவறான சிகிச்சை காரணமா?

x

சேலத்தில் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் மூன்று மாத பெண் குழந்தை உயிரிழந்ததாக, குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், தறி தொழில் செய்து வருகிறார். இவரது 3 மாத பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், நைனாம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்ஸ் குறைவாக இருப்பதால் குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தவறான சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்ததாகவும், குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்ககோரி, குழந்தையின் தந்தை மணிகண்டன், சேலம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்