நடுவழியில் பஸ்ஸை வழிமறித்து... ஓட்டுநரை வெளியே இழுத்து சரமாரி தாக்குதல்... போதை கும்பல் அட்டூழியம் - வெளியான பரபரப்பு வீடியோ

x

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, மதுபோதையில் தகராறு செய்த கும்பல், அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில், அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே 4 இருசக்கர வாகனங்கள் இருந்துள்ளது. அப்போது பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் அம்பிகா என்பவர், வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்து தகராறில் ஈடுபட்ட மதுபோதையில் இருந்த கும்பல், பேருந்தை வழிமறித்ததுடன், ஓட்டுநர் அம்பிகாபதி, நடத்துனர் குமரேசன் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், பேருந்து ஓட்டுநர் அம்பிகாபதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்